அநுர – மனோ இடையில் தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் சந்திப்பு!

அநுர – மனோ இடையில் தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோருக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அநுர, தற்போது தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பதில்லை என மனோ கணேசன், நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது பகிரங்கமாக கூறி இருந்தார்.

இதையடுத்தே  இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது.

இந்த தொலைபேசி உரையாடலின் போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவசர பிரச்சினைகள் குறித்து உரையாடுவதற்காக மனோ கணேசன் விடுத்த கோரிக்கையை ஏற்று கொண்ட ஜனாதிபதி, அடுத்த வாரம் தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழுவை, சந்தித்து உரையாட அழைப்பு விடுத்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )