2026 இறுதியில் உலகளாவிய ரீதியில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு – ஆய்வில் அதிர்ச்சி

2026 இறுதியில் உலகளாவிய ரீதியில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு – ஆய்வில் அதிர்ச்சி

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, மசகு எண்ணெய்யைத் தாண்டி உலகளாவிய உர உற்பத்தி மற்றும் விநியோகம் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

உலகின் மொத்த உர வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு (1/3) ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே நடைபெறுகிறது.

ஈரான் இந்த நீரிணையை மூடியுள்ளதால், கடந்த ஒரு வாரத்தில் சர்வதேசச் சந்தையில் ‘யூரியா’ (Urea) உரத்தின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 60 முதல் 80 டொலர்கள் வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.

நைட்ரஜன் உரத் தயாரிப்புக்கான முக்கிய மூலப்பொருளான இயற்கை எரிவாயுவின் விலை 30% அதிகரித்துள்ளமை இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எம். இஜாஸ் சுட்டிக்காட்டியது போல, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் தங்களது உரத் தேவையில் 90% இறக்குமதியையே நம்பியுள்ளதால், இந்த முடக்கம் அந்நாடுகளின் விவசாயத் துறையைப் பெரிதும் பாதிக்கும்.

உர விநியோகத் தடையானது பயிர் விளைச்சலில் 20% முதல் 30% வரை வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்பதால், 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உலகளாவிய ரீதியில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் பாரிய விலை உயர்வு ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, அரிசி, கோதுமை மற்றும் சோள உற்பத்தியில் இந்தத் தாக்கம் நீண்ட கால அதிர்வுகளை உண்டாக்கும் என ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )