கமேனியை கொன்றதற்கு தக்க பதிலடி ; ட்ரம்புக்கு ஈரான் மிரட்டல்

கமேனியை கொன்றதற்கு தக்க பதிலடி ; ட்ரம்புக்கு ஈரான் மிரட்டல்

கமேனியின் இழப்புக்கு பதிலடி தரும் வகையில், உரிய விலையை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு ஈரான் உயர்பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜனி மிரட்டல் விடுத்துள்ளார்.

அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் அவர் உரையாற்றுகையில் இவ்வாறு கூறி இருக்கிறார்.

எங்களின் எதிர்வினையை ட்ரம்ப் தவறாக மதிப்பிட்டுவிட்டார். இந்த மோதல் விரைவாக முடிவடையாது. வெனிசுலாவில் செய்ததை இங்கேயும் செய்ய முடியும் என்று ட்ரம்ப் எண்ணுகிறார்.

இப்போது அவர் மாட்டிக் கொண்டு இருக்கிறார். நாங்கள் அவரை விட மாட்டோம். அவர் செய்த செயலுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும். எங்களின் தலைவரை(கமேனி) கொன்றுள்ளார்.

1000க்கும் மேற்பட்டோரையும் கொன்றுள்ளார். இது ஒரு எளிதான விஷயம் அல்ல. இவ்வாறு அலி லாரிஜனி கூறி உள்ளார். இதே மிரட்டலை அவர் தமது எக்ஸ் வலைதள பதிவிலும் வெளியிட்டுள்ளார்.

அலி லாரிஜனியின் மிரட்டல் குறித்து பதிலளித்துள்ள ட்ரம்ப், அவர் என்ன பேசுகிறார்., யார் அவர் என்று எனக்கு தெரியவில்லை, அதுகுறித்து நான் கவலைப்பட போவதும் இல்லை என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )