ட்ரம்பின் எச்சரிக்கைக்கு மத்தியில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் நியமனம்

ட்ரம்பின் எச்சரிக்கைக்கு மத்தியில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் நியமனம்

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), மொஜ்தபா கமெனியை வாழ்த்தி, ஈரானின் புதிய உச்ச தலைவராக அவரை அங்கீகரித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

கமெனிக்கு “மனப்பூர்வமான மற்றும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் விசுவாசத்தை அறிவிப்பதாகவும், “அவரது உத்தரவுகளை கவனித்து கேட்டு அவற்றை நிறைவேற்ற தயாராக இருப்போம்” என்றும் IRGC தெரிவித்துள்ளது.

88 உறுப்பினர்கள் கொண்டநிபுணர்கள் அவை மூலம் கமெனி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, “இஸ்லாமிய அமைப்பின் பயணம் ஒருபோதும் நிற்காது என்பதையும், புரட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்பு தனிநபர்களை மட்டும் சார்ந்ததல்ல என்பதையும் அனைவருக்கும் நிரூபித்துள்ளது” என்றும் IRGC மேலும் கூறியுள்ளது.

ஈரானின் அரசியல் உயர்வட்டத்தில் மொஜ்தபா கமெனி என்ற பெயர் பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது.

இது சாத்தியமா இல்லையா என்ற விவாதமும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )