மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு கோரி பிரதான எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் குதிக்கும் !

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு கோரி பிரதான எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் குதிக்கும் !

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துமாறு கோரி போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி திட்டமிட்டு வருகின்றது.

இது தொடர்பில் நாளை திங்கட்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதன்படி மாகாண சபைகள் தேர்தலை தாமதிக்காமல் விரைவில் நடத்துமாறு பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ள நிலையில் அந்தத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சுஜீவ சேனசிங்க தெரிவித்தள்ளார்.

எவ்வாறாயினும் அரசாங்கத்தில் 159 பேர் இருப்பதால் மாகாண சபைகள் தேர்தலை எந்த முறையில் நடத்துவதாக இருந்தாலும் அது தொடர்பான சட்டமூலங்களை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் இருக்காது என்றும், இதற்கு எதிர்க்கட்சியும் ஆதரவை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )