பொலிஸார் பிழை செய்யவில்லை பாதிரியார்தான் தவறு செய்தார்!; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகிறார்

பொலிஸார் பிழை செய்யவில்லை பாதிரியார்தான் தவறு செய்தார்!; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகிறார்

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் சம்பவத்தில் பொலிஸார் பிழை செய்யவில்லை பாதிரியார்தான் பிழை செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளது பொய் என வண. பிதா சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

வண.பிதா மிலன் பிரியதர்ஷனவை பொலிஸார் தாக்கியதற்கு எதிராக பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் நேற்று (27) நீர்கொழும்பில் நடாத்திய எதிர்ப்பு ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் என்ற முறையில் அவர் ஒரு பக்கத்திற்கு சார்பாக பேச முடியாது. பாதிரியார் பொலிஸில் முறைபாடு செய்துள்ளார். அதில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஊடகப் பேச்சாளர் தெரிந்துகொள்ள வேண்டும்.

வாய்த் தகராறு ஏற்பட்டு அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அதன் பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வாய்த் தகராறு ஏற்பட்டால் மக்கள் வைத்தியசாலைக்கு செல்வதில்லையே. அடிபட்டால்தானே வைத்தியசாலைக்கு செல்வார்கள்.

பாதிரியார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனை முறைப்பாட்டில் தெளிவாக சொல்லியுள்ளார். கட்டாயம் சட்டத்தின் முன் செல்ல வேண்டும். எவருக்கும் அநியாயம் நடக்கக் கூடாது.

அரசு பிழை செய்தாலும் பிழை எனக் கூறுவோம். பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பது அவர்களின் தகைமைக்காகவல்ல மக்கள் வாக்களித்ததினாலாகும். அவர்கள் மக்களுக்கு செவிசாய்க்க வேண்டும். பொறுப்புள்ள அவர்கள் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் செய்யும் எதனையும் பொறுப்புடன் செய்ய வேண்டும். இல்லையேல் மக்கள் தமது வாக்குகள் மூலம் பதிலளிப்பார்கள் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )