வண.பிதாவை மோசமாக ஏசிய ஆறு பொலிஸார் கால்களாலும் தலைக் கவசத்தாலும் தாக்குதல்; நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதி

வண.பிதாவை மோசமாக ஏசிய ஆறு பொலிஸார் கால்களாலும் தலைக் கவசத்தாலும் தாக்குதல்; நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதி

பொலிஸாரால் தாக்கப்பட்ட கத்தோலிக்க வண.பிதா நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலுக்கு சம்பந்தப்பட்ட ஆறு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தழுகம, திப்பிட்டிகொட கத்தோலிக்க தேவஸ்தானத்திற்கு பூசைக்காக நேற்று முன்தினம் சனிக்கிழமை சனிக்கிழமை மாலை தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது கம்பஹா, கிரிந்திவிட்ட பகுதியில் எதிர் திசையில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 6 பொலிஸார் அவரை பின் தொடர்ந்து வந்து வாகனத்தை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் வந்ததாகக் கூறி நான்கு பொலிஸார் தகாத வார்த்தைகளில் ஏசியதுடன் தலைக் கவசத்தாலும் கால்களாலும் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான சீதுவ பண்டாரவத்தையைச் சேர்ந்த கொழும்பு மறை மாவட்ட பங்குத் தந்தை மிலான் பியதர்ஷன என்ற வண.பிதா நீர்கொழும்பு வைத்தியசாலையில் 7ம் வார்ட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரைப் பார்வையிடுவதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு உதவி பேராயர் வண.பிதா மெக்ஷிவல் சில்வா, தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் ஜுட் கிரிஷாந்த பிரனாந்து, கத்தோலிக்க பாதரிமார்கள் மற்றும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் காவிந்த ஜயவர்தன உள்ளிட்டோர் வைத்தியசாலைக்கு வந்திருந்தனர்.

வண.பிதா மிலான் பியதர்ஷனவை நலன் விசாரித்த பின்னர் தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் ஜுட் கிரிஷாந்த பிரனாந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

சனிக்கிழமை இரவு 7மணியளவில் கண்டி வீதியில் வைத்து மிலான் பிதாவை பொலிஸார் தாக்கியுள்ளனர்.

தளுகம, திப்பிட்டிகொட கத்தோலிக்க தேவஸ்தானத்திற்கு பூசைக்காக தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது எதிர் திசையில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் சென்ற 6 பொலிஸார், மோட்டார் சைக்கிள்க திரும்பி இவரை பின் தொடர்ந்து வந்து அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறியும் அவர் நிறுத்தாமல் வந்ததாகக் கூறி தூசண வார்தைகளால் பேசி ஹெல்மட்டாலும் கால்களாலும் மிக மோசமாகத் தாக்கியுள்ளனர்.

தான் கத்தோலிக்க பிதா என்றும் அதற்கான அடையாள அட்டையை காண்பித்தும் லோகுகாரர்களாலும் சிவுரக்காரர்களாளும்தான் இலங்கைக்கு வினை எனக் கூறி நான்கு பொலிஸார் மீண்டும் தாக்கினர். உடலிலும், அணிந்திருந்த லோகுவிலும் அடையாளங்கள் உள்ளன. அதனைக் கண்ட சாட்சிகளும் உள்ளன

தாக்கப்பட்ட பிதா தனது வீட்டிற்கு வந்து அங்கிருந்து உறவினருடன் சீதுவ வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு வந்துள்ளார். இந்தத் தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். கத்தோலிக்க பிதா ஒருவரை தாக்கிய முதல் சம்பவம் இது. கத்தோலிக்கர் என்ற முறையில் மன்னிக்கும் மனப்பாங்கு உள்ளது.

ஒரு சிலர் செய்த இந்தச் செயல் முழுப் பொலிஸாருக்கு பாதிப்பாகும். இலங்கைக்கு ஒரு கரும் புள்ளியாகும்.

நியாயமான விசாரணை நடாத்தி உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்டத் துறையுடன் தொடர்புடைய சகலரையும் மிக வினயமாக கேட்டுக்கொள்கிறோம். அப்படிச் செய்தால்தான் ஏனையவர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கும்.இச் சந்தர்ப்பத்தில் கத்தோலிக்க மக்களை அமைதியாக இருக்குமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

இந்த நிலையில்,இந்தச் சம்பவம் தொடர்பில், கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தின் மோட்டார் சைக்கிள் படைப் பிரிவைச் சேர்ந்த ஆறு பொலிஸாரும் கைது செய்யப்பட்டு கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஆறு பேரையும் இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )