அரசுக்கு எதிராக நடத்தப்படவுள்ள 1000 பேரணிகள்..! ஹரின் சூளுரை

அரசுக்கு எதிராக நடத்தப்படவுள்ள 1000 பேரணிகள்..! ஹரின் சூளுரை

அரசாங்கத்திற்கு எதிராக 1000 பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசிக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நடத்தும் நுகேகொடை பேரணி தொடர்பான வேலைத்திட்டங்களை பார்வையிட சென்ற போதே அவரை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொர்ந்து பேசிய அவர்,

இந்த பேரணிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர் சுயாதீனமாக கலந்து கொள்வார்கள் என நம்புகிறோம். இது அரசாங்கத்திற்கு எதிரான எமது போராட்டத்தின் ஆரம்பமாகும்.

அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் பேருந்து மற்றும் தொடருந்துகளில் செல்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்போது கெப் வாகனம் கேட்கின்றனர்.

தேசிய மக்கள் சக்தி நடிக்கும் இந்த நாடகத்தின் உண்மை தன்மையை வெளியில் கொண்டு வர முயற்சிக்கிறோம். இவர்கள் 159 பேரும் தோல்வியடைந்துள்ளனர்.

எங்கள் கட்சியின் பாசையில் சொல்வதென்றால், யானையின் வாலை மட்டுமே ஆட்டுகின்றனர் எனக் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )