
சட்டத்தின் பிடியில் இருந்து ராஜபக்ஷக்கள் தப்ப முடியாது!
“ராஜபக்ஷக்கள் பாரிய குற்றங்களை இழைத்தவர்கள். அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். சட்டத்தின் பிடியில் இருந்து அவர்கள் தப்பமுடியாது” என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “கொழும்பில் இருந்து தங்காலைக்கு குடியமரச் சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவும், அவரின் குடும்பத்தினரும் அங்கிருந்து கொண்டு அரசியல் இலாபம் தேடும் வகையில் ஒப்பாரி வைக்கின்றனர். அவர்களின் ஒப்பாரியால் நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்தமுடியாது.
ஒப்பாரி வைத்து தப்பிப் பிழைக்கலாம் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல், மோசடிகள் என ராஜபக்ஷக்கள் இழைத்த குற்றங்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும்.
மீண்டும் மொட்டுக் கட்சியின் ஆட்சி மலரும் என்று ‘குட்டி ராஜபக்ஷ’ நாமல் கனவு காண்கின்றார். அவர் இழைத்த குற்றங்களை அவர் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை” என்றார்.