
நாட்டில் தமிழ் அரசியல்வாதிகளுக்கிடையில் ஒற்றுமையில்லை – இராமநாதன் அர்ச்சுனா !
நாட்டில் தமிழ் அரசியல்வாதிகளுக்கிடையில் ஒற்றுமையில்லாமையே தமிழ் மக்கள் வேறு ஒரு தேசிய கட்சியை ஆதரிப்பதற்கு காரணம் என யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அவர் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல்வாதிகள் அவர்களுக்கிடையிலேயே ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு செயற்படுகின்றார்களே தவிர மக்களின் தேவைகள் மற்றும் தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் அவர்கள் ஒருபோதும் சிந்திப்பதில்லை.
அதனால் தான் மக்களுக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் மீது வெறுப்பு ஏற்படுவதுடன் மக்கள் அரசியலை கண்டு கொள்ளாத ஒரு நிலை உருவாகியுள்ளது.
அத்தோடு, தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் ஒற்றுமை உருவாகவில்லை என்றால், மக்களில் வாழ்க்கை நிலையில் மாற்றம் ஏற்படாது எனவும் இராமநாதன் அர்ச்சுனா எம்பி மேலும் தெரிவித்துள்ளார்.