உதய கம்மன்பிலவின் மனு எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு

உதய கம்மன்பிலவின் மனு எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் (ICCPR) கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வாவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

எனினும், உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது .

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )