மகிந்தவின் கிராம மக்களே உயிரிழப்பு; அவர் ஆழ்ந்த சோகம்

மகிந்தவின் கிராம மக்களே உயிரிழப்பு; அவர் ஆழ்ந்த சோகம்

எல்ல – வெல்லவாய பாதையில் நடந்த பேருந்து விபத்து குறித்து தான் மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தங்காலை பகுதியிலிருந்து சுற்றுலா சென்று திரும்பி வரும் போது ராவணா எல்ல பகுதியில் நடந்த இந்த விபத்தால் தங்காலை நகரசபையின் செயலாளராக உள்ள டி. டபிள்யூ. கே. ரூபசேன மற்றும் பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முழு நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்திய இந்த விபத்து, எனது கிராமமான தங்காலையில் உள்ள அனைவருக்கும் மிகவும் வருத்தமளிக்கிறது என்பதை நான் அறிவேன்.

மிகவும் ஆபத்தான சூழலில் உடனடியாகச் செயல்பட்டு, கயிற்றின் உதவியுடன் பாறையிலிருந்து கீழே இறங்கி உயிர்களைக் காப்பாற்ற உழைத்த அனைவருக்கும் நன்றிகள்.

குறிப்பாக இளைஞர்கள் உட்பட இராணுவ மற்றும் விமானப்படை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தீயணைப்புப் பிரிவு அதிகாரிகள், மருத்துவக் குழுக்கள் உள்ளிட்ட உள்ளூர்வாசிகள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சந்தர்ப்பத்தில், பதுளை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவர் வைத்தியர் பாலித ராஜபக்ச மற்றும் மருத்துவ ஊழியர்களையும் நான் நினைவு கூறுகிறேன்.

இந்த துயர விபத்தில் உயிர் இழந்த அனைவருக்கும் எனது அனுதாபங்கள். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பாக தங்காலை நகராட்சி ஊழியர்களின் அனைத்து குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )