
தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வினை வலியுறுத்தி பிரித்தானியாவில் ஈருருளிப்பயணம்!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வினை வலியுறுத்தி கடந்த 28 ஆம் திகதி பிரித்தானியவில் ஈருருளிப்பயண போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை நெதர்லாந்திலும் குறித்த ஈருருளிப்பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பயணத்தின் நெதர்லாந்து பிறேடா நகரசபைக்கு முன்பாக ஈருருளிப்பயணம் ஆரம்பமானது.
இந்நிலையில் குறித்த ஈருருளிப்பயணம் பெல்ஜியம் எல்லையை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.