
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்; 14 முறை கூடி ஆராய்வு
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தயாரிப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, நீதியமைச்சில் கூடி ஆராய்ந்துள்ளது. இதன்போது இந்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. குழுவின் தலைவர் ஜனாதிபதி வழக்கறிஞர் ரியன்சி அர்சகுலரத்ன, தொடர்புடைய சட்ட வரைவை விரைவில் இறுதி செய்ய முடியும் என்று கூறினார்.இந்தக் கலந்துரையாடலில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நெரின் புல்லே, சிரேஷ்ட பிரதி பொலிஸ் ஆய்வாளர் அசங்க கரவிட்ட, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மேலதிக செயலாளர் (சட்டம்) பியமுந்தி பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் சட்ட அதிகாரிகள், மேஜர் ஜெனரல் சந்துன் குணவர்தன, லெப்டினன்ட் கேணல் கே.என்.எஸ். மெண்டிஸ் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து இதில்,கொண்டனர்.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தயாரிப்தற்கான இந்த குழு, இதுவரை 14 முறை கூடியுள்ளது. இக்குழுவின் அடுத்த கூட்டம் நாளை வௌ்ளிக்கிழமை (22) நடைபெறவுள்ளது. இந்த சட்ட மூபம் வரைவு தொடர்பில் பொதுமக்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூகங்களிடமிருந்தும் கருத்துக்கள் கோரப்பட்டன.
நாட்டில் நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை, ரத்து செய்து புதிய சட்டத்தை வரைவதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர், அமைச்சரவையின் ஒப்புதலுடன் ஒரு நிபுணர் குழுவை நியமித்தார். புதிய மசோதாவை அறிமுகப்படுத்துவது, நவீன உலகளாவிய பயங்கரவாத சவால்களை நிவர்த்தி செய்வதையும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனிநபர்களின் மனித உரிமைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதையும், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தர நிலைகளுக்கு இணங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இப்புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது.