
நல்லூர் கந்தன் ஆலயத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்.!
நல்லூர் கந்தன் ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் ஆலயத்தில் பல பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வண்ணம் காவடி, அங்கப் பிரதிஷ்டை, அடியளித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது வழமை.
அந்தவகையில் நேற்றையதினம் தந்தை ஒருவர் அங்கப் பிரதிஷ்டையில் ஈடுபடும்போது அவரது மகனான சிறுவன் தந்தையின் பின்னே பக்தியுடன் நடந்து வருவது பார்ப்போரை நெகிழ்ச்சியுடன் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.



