
கொக்குத்தொடுவாய் புதைகுழி: தடயப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்களிடம் காணாமல்போனோர் அலுவலகம் கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காண உதவுமாறு காணாமல்போனோர் அலுவலகத்தின் (OMP) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி தற்பரன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வழக்கு (AR/804/23), முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப தொல்லியல் ஆய்வுகளின்படி, இந்தப் புதைகுழி 1994-1996 காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண உதவுமாறு முல்லைத்தீவு நீதவான், காணாமல்போனோர் அலுவலகத்திடம் கோரியுள்ளார். இது தொடர்பாக இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தனிநபர்களிடம் முக்கிய தகவல்கள் இருக்கலாம் என்று காணாமல்போனோர் அலுவலகம் நம்புகிறது.
மீட்கப்பட்ட பொருட்களில் உள்ளாடைகள், கால்சட்டைகள், சட்டைகள், பித்தளை வளையல்கள், நாய் காலர்கள் (dog collars) மற்றும் குறிப்பிட்ட அடையாள எண்களைக் கொண்ட பிற ஆடைகள் போன்ற தனிப்பட்ட பொருட்கள் அடங்கும்.
காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள், இந்தப் பொருட்களை அடையாளம் காணக்கூடியவர்களாக இருந்தால், உடனடியாகத் தகவல்களை வழங்குமாறு அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. தகவல்களை வழங்குபவர்களின் இரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அலுவலகம் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால், உளவியல் ஆதரவு சேவைகளும் வழங்கப்படும்.
பொதுமக்கள் ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 4, 2025 வரை பின்வரும் அலுவலகங்களில் நேரடியாக தகவல்களை வழங்கலாம்:
* இராஜகிரிய: இல. 40, 3ஆம் மாடி, புக்குமுவே வீதி
* மாத்தறை: இல. 54, தர்மாறாம வீதி
* முல்லைத்தீவு: மாவட்டச் செயலகம்
* மட்டக்களப்பு: நீதிமன்ற வீதி, பழைய மாவட்டச் செயலகக் கட்டிடம்
* யாழ்ப்பாணம்: 3ஆம் மாடி, புதிய மாவட்டச் செயலகக் கட்டிடம்
* மன்னார்: மாவட்டச் செயலகம்
* கிளிநொச்சி: A9 வீதி, நீதிமன்றத்திற்கு அருகில்
அத்துடன், பின்வரும் தொலைபேசி எண்களிலும் தொடர்புகொள்ளலாம்:
* இராஜகிரிய: 0112861431
* மாத்தறை: 0412244684
* முல்லைத்தீவு: 0212286030
* மட்டக்களப்பு: 0652222229
* யாழ்ப்பாணம்: 0212219400
* மன்னார்: 0232223929