செம்மணி மனிதப் புதைகுழி ஆய்வுக்கு சர்வதேச உதவியை உடன் பெற அனுமதிக்க வேண்டும்

செம்மணி மனிதப் புதைகுழி ஆய்வுக்கு சர்வதேச உதவியை உடன் பெற அனுமதிக்க வேண்டும்

நல்லிணக்கம் வேண்டும் எனச் சொல்லும் அரசாங்கம் செம்மணி மனிதப் புதைகுழி பற்றிய உண்மைகள் வெளிவருவதற்கு ஏற்ற சகல நடவடிக்கைகளையும் செய்து கொடுக்க வேண்டும். அவற்றுக்கான அனுமதிகளை கொடுக்க வேண்டும். சர்வதேச நிபுணர்களை வரவழைத்து இதனை ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை நேற்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இரண்டு சிறிய பிரதேசங்களில் தோண்டப்படும் போது நூற்றுக்கும் மேற்பட்ட எலும்பு கூடுகள் கிடைக்கிற காரணத்தால் அதிக தொகையான எலும்பு கூடுகள் இங்கு கண்டெடுக்கப்படலாம் என்ற சந்தேகம் இருக்கிறது.

ஆழமாக புதைக்கப்படவில்லை. நில மட்டத்திலிருந்து 50 சென்ரி மீற்றரில் கூட உடல்கள் புதைக்கப்பட்டதாக தெரிகிறது. புதைக்கப்பட்ட முறைகள் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது கைகள் ஒன்றாக இருக்கிறது. கைகள் மடித்து வைக்கப்பட்ட நிலையிலும் கால்கள் ஒன்றாக இருப்பது போன்ற நிலையிலும் காணப்படுகிறது.

வயது குறைந்தவர்களின் எலும்பு கூடுகள் கூடுதலாக கண்டறியப்படுகிறது. ஆகையினால் சாதாரணமாக சுடலையில் காணப்படுகின்றதை போல அல்லாமல் அசாதாரண சூழ்நிலை போல குவியல்களாக புதைக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இதன்போது சரியாக புதைக்கப்பட்ட சடலங்களின் எலும்பு கூடுகளும் கண்டறியப்படலாம். அவற்றை முறையாக பகுத்தறிந்து இனம் கண்டு மீளவும் சரியான முறையில் புதைக்கப்படலாம். அசாதாரணமான விதத்திலே கண்டெடுக்கப்படுகிற எலும்புத் தொகுதிகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு கையளிக்கப்படுவதாக அறிகிறோம்.

இந்த விடயங்கள் சம்பந்தமாக யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தினுடைய வேண்டுகோளுக்கிணங்க சட்டத்தரணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படியாக இன்றைய தினத்திற்கு என்று நாங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளோம்.

இந்த மாதிரியான மனிதப் புதைகுழி சம்பந்தமாக இதற்கு முன்னர் நடைபெற்ற அகழ்வுப் பணிகள் கொக்குதொடுவாயில் நடந்தபோது நாங்கள் அங்கே சென்றிருந்தோம். அங்கே பல கலந்துரையாடல்களில் நீதிவானோடு நாங்கள் சேர்ந்து இயங்கியிருந்தோம். அங்கே அகழும் பணிகள் நடைபெற்றன.

அந்த அனுபவத்தையும் அதற்கு முன்னர் மன்னார் அதற்கு முன்னர் மாத்தளை, 94 ஆம் ஆண்டுக்கு பிறகு தெற்கிலே சில இடங்களில் கண்டறியப்பட்ட மனித புதைகுழிகள் சம்பந்தமான அனுபவங்களும் உடையவர்கள் இருந்தாலும் கூட இவ்வாறு கண்டுபிடிக்கப்படுகிற எலும்புக்கூடுகளை பரிசோதனையை செய்வதற்கான நிபுணத்துவம் இலங்கையிலே இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். உலகத்திலேயே ஒரு சில பல்கலைக்கழகங்களிலேயே அது இருக்கிறது.

ஆகையினால் தான் செம்மணியில் 99 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட 15 எலும்பு தொகுதிகளில் இரண்டு சான்றுகளாக கிளாஸ்கோ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டது. முதல் ஹைதராபாத்துக்கு அனுப்பப்பட்டு அங்கு செய்ய முடியாது என திருப்பி கிளாஸ்கோவுக்கு அனுப்பப்பட்டது.

மனித எலும்புக்கூடுகள் யாருடையது என்பதை அடையாளம் காணுதல் மிக முக்கியமான பங்களிப்பை செய்யப் போகிறது.

ஆகையினால் இதை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புவதற்கு முன்னர் எப்படியாக சான்றுகளை பெறுவது, எப்படியாக சரியான நிலையில் பாதுகாத்து வைப்பது , எவ்வாறு அனுப்புவது என்ற விடயங்கள் சம்பந்தமான நிபுணத்துவமும் கூட சர்வதேச நிபுணர்கள் இடத்தில் இருந்து பெற வேண்டும்.

இந்த விடயங்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். உடனடியாக சர்வதேச மேற்பார்வையாளர்கள் நிபுணத்துவம் உடையவர்களை வரவழைக்க வேண்டும் அனுமதி கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.

இந்த விடயங்களை சரியான முறையில் ஆராய்ந்தாலே நாட்டிலே நடைபெற்ற பலவிதமான சர்வதேச குற்றச் செயல்களுக்கான சாட்சியங்கள் வெளிவரும்.ஆகவே இது மிக முக்கியமான விடயம்.

அரசாங்கம் நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதாக சொல்கின்ற போது, எந்த நல்லிணக்கமும் உண்மையின் அடிப்படையிலேயே செய்யப்படலாம். உண்மையை மூடி மறைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. நல்லிணக்கமே வேண்டும் என சொல்லும் அரசாங்கம் இந்த உண்மைகளை வெளிவருவதற்கு ஏற்ற சகல நடவடிக்கைகளையும் செய்து கொடுக்க வேண்டும். அவற்றுக்கான அனுமதிகளை கொடுக்க வேண்டும். சர்வதேச நிபுணர்களை வரவழைத்து இதனை ஒப்படைக்க வேண்டும்

எலும்புக் கூடுகளை பரிசோதித்து அறியும் பொறுப்பு முழுவதும் சுயாதீனமாக செயல்படும் சர்வதேச நிறுவனங்களிடம் கொடுக்கப்பட வேண்டும். அதற்கான விடை

யங்களை நாங்கள் வேறுவிதத்தில் செய்கிறோம். தற்போது இங்கே நடைபெறுவ தை பார்வையிட்டு நீதிமன்றம் ஊடாக ஏதாவது உத்தரவுகள் பெறப்படுவதற்கு தேவையாக இருந்தால் அந்த கருமங்களிலும் நாங்கள் ஈடுபடுவோம் – என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )