
“செம்மணியில் உங்களின் பிரசன்னம் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வலுவான செய்தியை சொல்லும்”; மனித உரிமை ஆணையாளருக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் கடிதம்
செம்மணி மற்றும் ஏனையமனித புதைகுழிகள்குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் திட்டத்தில் குறிப்பிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ் என தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கனேடிய தமிழ் காங்கிரஸ் இதனை தெரிவித்துள்ளது.
கனேடிய தமிழ் காங்கிரஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் தொடர்பில் இலங்கைக்கான உங்களது விஜயத்தினையும் நாட்டிற்குள் நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றை முன்னகர்த்துவது குறித்த உங்கள் அர்ப்பணிப்பையும் நாங்கள் வரவேற்கின்றோம்.
உங்களது விஜயம் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக கொண்டது என்பதை நாங்கள் அறிந்துகொண்டுள்ள அதேவேளை செம்மணி சிந்துபாத்தி மனித குறித்த விடயங்கள் உங்கள் அறிக்கையில் நேரடியாக குறிப்பிடப்படவேண்டும் என வலியுறுத்திக்கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கை விஜயத்தின் போது யாழ்ப்பாணம் செம்மணி மனித மனித புதைகுழிக்கான விஜயத்தையும் இணைத்துக்கொள்ளுமாறு நாங்கள் வலுவான வேண்டுகோளை விடுக்கின்றோம்.
செம்மணியில் உங்களின் பிரசன்னம் இலங்கை அரசாங்கத்திற்;கும் சர்வதேச சமூகத்திற்கும் வலுவான செய்தியை சொல்லும்இந்த விடயத்தின் தீவிரதன்மையை மீண்டும் வலுப்படுத்தும்.