தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் மாணவி வரலாற்று சாதனை

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் மாணவி வரலாற்று சாதனை

கல்வி அமைச்சினால்  நடத்தப்பட்ட தேசிய  விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில்  பிரிவு 8,9 ல் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி  மாணவி அ. நயோலின் அப்றியானா வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தையும், மஹரகம  ஜனாதிபதி கல்லூரியில் கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று  வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.

அவருக்கு சான்றிதழ் கல்வி அமைச்சில் வெள்ளிக்கிழமை கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்னவால் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவருடன் வட மாகாணத்தை சேர்ந்த இரு மாணவர்கள்,  இரண்டு இரண்டாம் நிலைகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் வடமாகாண மாணவர்கள் பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில்  மாகாணங்களுக்கிடையிலான தரப்படுத்தல் வரிசையில்  வட மாகாண  மாணவர்கள் வடமாகாணத்திற்கு  முதல் இடத்தைப் பெற்றுக் கொடுத்தது பெருமைக்குரிய விடயம் ஆகும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )