திடீரென வானில் தீப்பிடித்த பலூன் – 8 பேர் உயிரிழப்பு – 13 பேர் காயம்!

திடீரென வானில் தீப்பிடித்த பலூன் – 8 பேர் உயிரிழப்பு – 13 பேர் காயம்!

பிரேசிலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு சூடான காற்று பலூன் திடீரென வானிலே எரிந்து தரையில் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து பிரேசில் சாண்டா கேடரினா மாநிலத்தில் உள்ள பிரியா கிராண்டே நகரில் இன்று இடம்பெற்றது.

தீயில் எரிந்து விபத்துக்குள்ளான பலூனில் மொத்தம் 21 பயணிகள் இருந்துள்ளனர். அதில் பயணம் செய்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மிகுதி 13 பேரும் காயமடைந்துள்ளனர்.

சுற்றுலாவிற்குப் பயன்படுத்தப்பட்ட பலூன், காலை விமானப் பயணத்தின் போது திடீரென தீப்பிடித்தது. தீ விபத்துக்குப் பிறகு, பலூன் கட்டுப்படுத்த முடியாமையால் பிரியா கிராண்டே நகரில் தரையில் விழுந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

விபத்து தொடர்பில் சாண்டா கேடரினா ஆளுநர் ஜோர்ஜினோ மெலோ, ‘X’ பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ” சனிக்கிழமை காலை விபத்துக்குள்ளான சூடான காற்று பலூனில் 22 பேர் இருந்தனர்”. இருப்பினும், தீயணைப்புத் துறையின் கூற்றுப்படி, 21 பயணிகள் இருந்தனர் . நிவாரண மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. “இந்த விபத்தால் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளோம்” .- என்று பதிவில் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )