ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளித்த மைத்திரி

ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளித்த மைத்திரி

அநுராதபுரம் எப்பாவெல பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் உப தலைவரினால் நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவில் அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் அவர் மீது முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என தெரிவித்த மைத்திரிபால சிறிசேன
முறைப்பாடு தொடர்பில் எந்தவொரு விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தாம் எந்தவொரு ஊழல் மோசடிகளிலும் ஈடுபடவில்லை எனவும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )