முக்கிய வழக்குகளை கையில் எடுத்த அநுர – சிக்கவுள்ள இரு ராஜபக்சர்கள்..!

முக்கிய வழக்குகளை கையில் எடுத்த அநுர – சிக்கவுள்ள இரு ராஜபக்சர்கள்..!

நாமல் ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரிடம் குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பல வழக்குகள் தொடர்பில் விரைவில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து குற்றப்பத்திரிகையை வெளியிடுவார்கள் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

நாட்டில் உள்ள பல விசாரணைகள் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்திற்கு ஏராளமான வழக்குகள் தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

அதன் பிறகு அந்த விடயங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.அதுதான் கடைசி படி. அதன் பிறகு நீதிமன்றத்திற்கு தண்டனை வழங்க அதிகாரம் உள்ளது.

அரச நிறுவனங்களின் முக்கியமான பங்கு, வழக்குகளை விசாரித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதாகும்.

இப்போது கெஹெலிய ரம்புக்வெல்ல, மேர்வின் சில்வாவின் விசாரணை முடிவுக்கு வருகிறது. குற்றப்பத்திரிகை மிக விரைவில் ஒப்படைக்கப்படும்.

இந்நிலையில் கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக நமாலுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது. யோசிதாவிடமும் குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பல வழக்குகள் தொடர்பில் விரைவில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து குற்றப்பத்திரிகையை வெளியிடுவார்கள். அதன் பிறகு, நீதிமன்றத்திற்குச் செல்வதே பணி. என கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )