யாழில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

யாழில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நிர்வாகச் செயலாளர் எக்ஸ்.குலநாயகம் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )