பல்கலைக்கழகத்தில் பகிடிவதை வேண்டாம் என்ற மாணவியை தாக்கிய சக மாணவன் கைது!

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை வேண்டாம் என்ற மாணவியை தாக்கிய சக மாணவன் கைது!

புதிதாக பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தில் 3ம் ஆண்டில் கல்வி கற்று வரும் சிங்கள மாணவர்களுக்கிடையே புதிதாக பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களை பகிடிவதை செய்வது தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாத்தின் போது மாணவி ஒருவர் பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த மாணவியின் கன்னத்தில் சக மாணவன் ஒருவர் தாக்கியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மாணவியை தாக்கிய சக மாணவனை நேற்று இரவு(24) பொலிசார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )