மட்டக்களப்பு கல்லடி பாலம் வாவியில் மிதந்து வந்த தமிழன அழிப்பு நினைவு தூபிகளால் பெரும் பரபரப்பு

மட்டக்களப்பு கல்லடி பாலம் வாவியில் மிதந்து வந்த தமிழன அழிப்பு நினைவு தூபிகளால் பெரும் பரபரப்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் தமிழின அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தமிழின அழிப்பின அடையாளமான முள்ளிவாய்கால் தூபியினை கொண்ட புகைப்படங்கள் மற்றும் கறுப்பு, சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு மிதக்கும் தூபிகள் நேற்று சனிக்கிழமை (17) இரவு ஒன்பது மணியளவில் மிதந்து வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இரவு 9.00 மணியளவில் மின் விளக்குகள் ஒளிர்ந்த நிலையில் இரு மிதக்கும் வகையிலான தமிழின அழப்பின் நினைவாக தயாரிக்கப்பட்ட தூபிகள் மிதந்து முகத்து வாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இரவில் மின்விளக்குகள் ஒளிர்ந்த நிலையில், மனிதர்கள் இன்றி இரு சிறிய படகுகள் போல மர்மான பொருள் வாவியில் ஒரு மணித்தியாலம் மிதப்பதை கண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இனையடுத்து அங்கு வந்த புலனாய்வு பிரிவினர் அதனை மீட்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

சுமார் நான்கு அடி கொண்ட சதுர வடிவில் முள்ளிவாய்காலில் அமைந்துள்ள நினைவு தூபி புகைப்படம் நிறுத்தப்பட்டு அதில் தலைமகனின் வீர வணக்க நாள், இன அழிப்பு வாரம் 12 வைகாசி முதல் 17 வைகாசி வரை, பொங்கு தமிழ் பேரவை என வாசகம் எழுதப்பட்டிருந்தது.

அதற்கு அருகில் கறுப்பு, சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு அதனை சுற்றி மெழுகுவர்த்தி போன்ற வடிவிலான் மின்விளக்குகள் ஒளிரவிட்டு மிதக்கும் முறையில் தயாரிக்கப்பட்டு வாவியில் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )