
ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவாக இந்திய ராணுவத்தை அனுப்ப சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள்
இலங்கையில் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவாக இந்திய ராணுவத்தை அனுப்புமாறு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பரிந்துரைத்துள்ளார்.
“கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் சுதந்திரமான தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய சட்டபூர்வமான தேர்தலை ஒரு கும்பல் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்கும்? என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அப்படியானால் நமது சுற்றுப்புறத்தில் உள்ள எந்த ஒரு ஜனநாயக நாடும் பாதுகாப்பாக இருக்காது. இந்தியாவின் இராணுவ உதவியை ராஜபக்சே விரும்பினால் நாங்கள் வழங்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
சுப்பிரமணியம் சுவாமி இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத் தக்கது.

