
பிள்ளையான் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச் சட்டம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரிகாந்தனை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து 8 ஆம் திகதி இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சிவநேசதுரை சந்திரிகாந்தன் கைது செய்யப்பட்டார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.