
யாழ். மாவட்டத்தில் 3 சபைகளை நிச்சயமாகக் கைப்பற்றுவோம்; மணிவண்ணன் நம்பிக்கை
எதிர்வரும் மேமாதம் நடாத்தப்படவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் மூன்று சபைகளை நிச்சயமாக நாங்கள் கைப்பற்றுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை காணப்படுவதாகத் தமிழ்மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மான் சின்னத்தில் போட்டியிடுவதற்காகத் தமிழ்மக்கள் கூட்டணி சார்பில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வல்வெட்டித்துறை நகர சபையிலும் எங்கள் அணியினர் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றார்கள். அங்கும் எங்கள் சுயேட்சைக் குழு ஆட்சியமைக்குமென்ற நம்பிக்கையிருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
CATEGORIES செய்திகள்