
கனடாவின் அடுத்த பிரதமராக மார்க் கார்னே தெரிவு
கனடாவினதும் அந்த நாட்டின் லிபரல் கட்சியினதும் தலைவராவதற்கான போட்டியில் மார்க்கார்னே வெற்றிபெற்றுள்ளார்.
அடுத்த சில நாட்களில் இவர் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்அனைவருக்கும் வலுவான கனடாவை கட்டியெழுப்பும் ஒரேநோக்கத்துடன் நான் இரவுபகலும் பாடுபடுவேன் என பொருளாதார நிபுணரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநருமான மார்க் கார்னே தனது வெற்றி உரையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கனடாவை மதிக்கும்வரை அமெரிக்காவிற்கு எதிரான புதிய வரிகள் தொடரும் என மார்க்கார்னே தெரிவித்துள்ளார்.