எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயார் – நாமல் எம்.பி

எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயார் – நாமல் எம்.பி

எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இளைஞர் அமைப்பின் அலுவலகத்தைத் திறந்து வைத்த பின்னர், உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை தீக்கிரையாக்க இளைஞர்கள் பயன்படுத்தப்படுவதில்லை, புதிய நாட்டிற்காக இளைஞர்கள் வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாக, நாம் ஒரு புதிய பயணத்தைத் தொடங்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், எனவே இளைஞர் முன்னணியாக இலங்கைக்கு ஏற்ற கொள்கைகளுடன் முன்னேறத் தொடங்கியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டு மக்கள் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் அமைப்புடன் அரசியலில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும் என்று நாமல் ராஜபக்ஷ கூறினார், மேலும் சிலர் தேர்தல்களின் போது இளைஞர்களுக்கு வரம்பற்ற நம்பிக்கைகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

இளைய தலைமுறையினருக்கு வேலைகள் மற்றும் கார்களைக் காட்டி அவர்களை தவறாக வழிநடத்தும் ஒரு அரசியல் கலாச்சாரம் இருப்பதாகவும், அந்தக் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )