அமெரிக்காவை இந்தியா நன்றாக பயன்படுத்தி கொள்கிறது

அமெரிக்காவை இந்தியா நன்றாக பயன்படுத்தி கொள்கிறது

இந்தியாவில் வாக்குப் பதிவை அதிகரிக்க வழங்கப் படும் 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை நிறுத்துவதாக அதிபர் டிரம்பின் நிர்வாகம் அறி வித்தது. இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது. நாம் ஏன் நிதி தர வேண்டும் என டிரம்ப் தெரிவித்தார்.மேலும் இந்தியாவில் தேர்தல் முடிவை மாற்ற முந்தைய ஜோபைடன் நிர்வாகம் இந்த நிதியை அறிவித்திருந்ததாக டிரம்ப் தெரிவித்தார்.

தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த முயற்சி நடந்ததாக தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்தியா வுக்கு நிதி அளிக்கபட்டது தொடர்பாக டிரம்ப் தொடர்ந்து 4-வது நாளாக கருத்து தெரிவித்துள்ளார்.

கன்சர்வேடிவ் அரசியல் நடவடிக்கை மாநாட்டில் டிரம்ப் பேசியதாவது:-இந்திய தேர்தல்களில் உதவுவதற்காக 18 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாம் ஏன் வழங்க வேண்டும்? அதற்கு பதிலாக நாம் ஏன் பழைய காகித வாக்குச் சீட்டுகளுக்குச் சென்று, அவர்களின் தேர்தல்களில் உதவக்கூடாது? நாம் இந்தியாவுக்கு தேர்தல்களுக்கு பணம் கொடுக்கிறோம்.

ஆனால் அவர்களுக்கு பணம் தேவையில்லை. உலகின் மிக அதிக வரி விதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாம் அங்கு எதையாவது விற்க முயற்சிக்கும்போது 200 சதவீத வரி விதிக்கிறார்கள். அதன்பின் நாம் அவர்களின் தேர்தலுக்கு உதவ நாம் அவர்களுக்கு நிறைய பணம் கொடுக்கிறோம். அவர்கள் எங்களை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.இவ்வாறு டிரம்ப் கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )