யாழ் மாவட்டத்தில் 3575 ஏக்கர் காணிகள் பாதுகாப்பு தரப்பினர் வசம் – வெளியான புள்ளிவிவரம்

யாழ் மாவட்டத்தில் 3575 ஏக்கர் காணிகள் பாதுகாப்பு தரப்பினர் வசம் – வெளியான புள்ளிவிவரம்

யாழ் மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் தனியார் காணிகளில் சுமார் 3575.81 ஏக்கர் பாதுகாப்பு தரப்பினரின் பிடியில் காணப்படுகிற நிலையில் 2624.29 ஏக்கர் தனியார் காணிகள் பாதுகாப்பு தரப்படும் காணப்படுகிறது.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அனுத குமார திசாநாயக்கா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலின் போது குறித்த புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது.

இவ்வருடம் 2025 தை மாதம் 31 ஆம் திகதி வரையான தரவுகளின் அடிப்படையில் குறித்த புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது.

யாழ் மாவட்டத்தில் குறிப்பாக வலி வடக்கில் விடுவிக்கப்படாத தனியார் காணிகள் அனேகமாக ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில் அரச காணிகளில் விமானப்படையினர் கணிசமான காணிகளை தம்வசம் வைத்துள்ளனர்.

யாழ் மாவட்டத்திலுள்ள தனியார் காணிகளில் இராணுவத்தின் பிடியில் 1775.27 ஏக்கர், விமானப் படையினரிடம் 660.05 ஏக்கர், கடற்படையினரிடம் 160.67 ஏக்கர், போலீசாரிடம் 28.28 ஏக்கரும் காணப்படுகின்றன.

அதேபோல் யாழ் மாவட்டத்திலுள்ள அரச காணிகளில் 951. 5 2 ஏக்கர் பாதுகாப்பு தரப்பினரிடம் காணப்படுகின்ற நிலையில் இராணுவத்திடம் 411.66 ஏக்கர், விமானப்படையினரிடம் 349.82 ஏக்கர்

கடற்படையினரிடம் 179.70 ஏக்கர் மற்றும் போலீசாரிடம் 10.34 ஏக்கரும் காணப்படுகிறது.

மொத்தமாக யாழ் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 575 தசம் 81 ஏக்கர் காணிகளை பாதுகாப்பு தரப்பினர் தமது பயன்பாட்டுக்காக வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )