
நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு இடையே சரக்குக் கப்பல் சேவை மார்ச் மாதம் ஆரம்பம்
தமிழகம் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையே இந்திய கப்பல் நிறுவனத்தால் “தாரா கிரண்” என்ற சரக்குக் கப்பல் சேவை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையே நிரந்தரமான தொடர் சேவையை வழங்குவதற்காக ஏ & என் லொஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் 700 மெட்ரிக் தொன் எடை கொண்ட “தாரா கிரண்” என்ற கப்பலை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது. இதன் முதல் பயணம் மார்ச் 2025 முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.
40 ஆண்டுகால உலகளாவிய கப்பல் போக்குவரத்து திபுணத்துவத்துடன் அந்தமானில் தலைமையகத்தைக் கொண்ட ஏ & என் லொஜிஸ்டிக்ஸ், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு நம்பகமான மற்றும் திறைமையான இடப்பெயர்வு தீர்வுகளை வழங்கி வருகிறது.
2024 முதல் இலங்கை அடைந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கவனித்த ஏ & என் லொலாஜிஸ்டிக்ஸ் இயக்குநர்கள் குழு தென்னிந்தியாவிற்கும் இலங்கையின் வடக்குக்கும் இடையிலான வணிக நடவடிகைகளை நேரடியாக மீண்டும் நிறுவும் வகையில் பயன்படுத்தப்படாத இப்பிரதேசத்தில் நுழைய முடிவு செய்தது.
இந்நிறுவனமானது மார்ச் 2025 இல் இந்த இரண்டு இடங்களுக்கும் இடையிலான ஒரு பயணிகள் படகுச் சேவையையும் ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது மேலும் தகவல்கள் பெற உள்ளூர் நிறுவனத்தை 077 798 8028 அல்லது 072 3793368 என்ற தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

