கனடாவில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை

கனடாவில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை

கனடாவில், இந்திய மாணவர்கள் 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வெறுப்பு குற்றம் காரணமாக, இந்த சம்பவங்கள் நடைபெறுவதால், இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கனடா ஆதரவு தெரிவித்து, இந்தியா மீது குற்றம் சுமத்தியதால் இந்தியா – கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கனடா நாட்டு மக்கள் அல்லது காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு விசாக்கள் வழங்குவதை இந்தியா மறுக்கிறது என, கனடா ஊடகத்தில் செய்தி வெளியாகின. இதன் காரணமாக ஏற்பட்ட வெறுப்பில் கனடாவில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,

“கனடா ஊடகத்தில் வெளியாகும் செய்தி, இந்திய இறையாண்மை விடயத்தில் வெளிநாட்டு தலையீடு போன்றது. இந்தியா பற்றி அவதூறு தகவல்களை கனடா ஊடகங்கள் தெரிவிப்பதற்கு இது மற்றொரு உதாரணம் ஆகும். இந்திய விசா வழங்குவது நமது இறையாண்மையுடன் தொடர்புடைய செயற்பாடு. இந்திய ஒற்றுமையை குறைத்து மதிப்பிடுபவர்களுக்கு விசா மறுப்பது எங்களின் சட்டப்பூர்வ உரிமை.

“கனடாவில் இந்திய மாணவர்கள் 3 பேர் படுகொலை செய்யப்பட்டது கொடூரமான சோகம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவியை, கனடாவின் டொரன்டோ மற்றும் வான்கூவர் நகரங்களில் உள்ள இந்திய துணை தூதரகங்கள் செய்கின்றன.

“இந்த கொலை விசாரணை குறித்து உள்ளூர் பொலிஸ் அதிகாரிகளுடன், இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். கனடாவில் வெறுப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )