தமிழ் தேசிய தரப்புக்கள் ஒன்றிணையாவிட்டால் மாகாண சபை,உள்ளூராட்சி சபைகளும் பறிபோகும்!

தமிழ் தேசிய தரப்புக்கள் ஒன்றிணையாவிட்டால் மாகாண சபை,உள்ளூராட்சி சபைகளும் பறிபோகும்!

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை கருத்திற் கொண்டு அனைத்து தமிழ் தேசிய தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டும். இல்லாவிடில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளையும் தேசிய மக்கள் சக்தியிடம் பறிகொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இடதுசாரிகளுக்கு என பண்பியல்வு இருக்கிறது. அவர்கள் தமக்கு ஏற்றவாறு சட்டங்களை மாற்றி தமது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருப்பார்கள். இதனை உணர்ந்த கொண்டு தமிழர்தரப்பு ஒற்றுமைப்பட வேண்டும். வடக்கையும் கிழக்கையும் பறிகொடுத்து விட்டு, எங்கள் மீது திணிக்கப்படப் போகும் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட போகும் என்பதனை உணர்ந்து கொண்டும், உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்களிலும் அவற்றினை தமிழர் தரப்பு தேசிய மக்கள் சக்தியிடம் பறிகொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இதனை உணர்ந்து தமிழர் தரப்புக்கள் ஒற்றுமைப்பட வேண்டும். இதனை நாம் அழைப்பாக விடுக்கின்றோம்.

தேர்தலில் தோற்றுப் போனவன் என இதனை பலர் எள்ளி நகையாடலாம். அவ்வாறில்லாமல் தமிழ் தலைமைகள் ஒன்றுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிளவுபட்ட தமிழர்களாக தொடர்ந்தும் இருக்க வேண்டும் என விரும்பில்லை.

கூட்டு இப்படித்தான் இருக்க வேண்டும் எனக் கூறவில்லை. ஆசன மோதல்களை கைவிட்டு தமிழ் தரப்பு ஒன்றிணைய வேண்டும். தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து விட்டார்கள் என தமிழ் வாக்களர்களை மலினப்படுத்த விரும்பவில்லை. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டும்.

பொதுக்கட்டமைப்பின் உடைவுக்கு, பொது அமைப்புக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தான் உடைத்தார்கள். அதனை தொடர்ந்து கட்சி தலைவர்களின் அகங்காரம் மற்றும் ஆசன பங்கீடும் காரணமாக அமைந்திருந்தது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )