பாராளுமன்றத்தில்  29 தேசியப் பட்டியலுக்கு 527 பேர் வரிசையில்!

பாராளுமன்றத்தில்  29 தேசியப் பட்டியலுக்கு 527 பேர் வரிசையில்!

பாராளுமன்றத்தில் 29 தேசியப் பட்டியல் ஆசனங்களுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் சார்பாக 527 பேரின் பெயர்களை கொண்ட பட்டியல் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

225 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்திற்கு நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 பேர் மக்களால் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் மிகுதி 29 பேரும் தேசியப் பட்டியல் ஊடாகவே பாராளுமன்றம் செல்லவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்றுக்கொள்ளும் வாக்கு விகிதாசாரத்திற்கமைய தேசியப் பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்படவுள்ளன.

அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் சார்பாக 527 பேரின் பெயர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவர்களிடையே கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்ற பலரின் பெயர்களும் அடங்கின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )