முதல் தடவையாக மாபெரும் வரலாற்று துரோகம்!

முதல் தடவையாக மாபெரும் வரலாற்று துரோகம்!

ஜனாதிபதி நல்லாட்சி காலத்தில் புதிய அரசியல் அமைப்பு தயாரிக்க முன்னெடுத்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்ற போவதாக அறிவித்தது சரித்திரத்தில் முதல் தடவையாக விரும்பி ஏற்றுக்கொள்கின்ற மாபெரும் வரலாற்று துரோகத்தை செய்வதற்கும் எங்களுடைய தலைவிதியை அடிப்படையிலே மாற்றி அமைக்க கூடிய தேர்தலாக இருக்கின்றது. மக்களை எச்சரிக்கின்றோம் எனவே இந்த வரலாற்று மாற்றத்தை தடுக்க இந்த முறை எமது கட்சி 10 பேரை பாராளுமன்றத்திற்கு அனுப்ப மக்கள் ஆணை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு அரசடி தேய்வநாயகம் மண்டபத்தில் கடந்த 31 ஆம் திகதி மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த தேர்தல் விசேடமாக தமிழ் மக்களுடைய தலைவிதியை மாற்றி அமைக்கக் கூடிய ஒரு தேர்தலாக சமகால அரசியல் ஆக்கிவிட்டது என்ற கருத்து மேலோங்கியுள்ளது. ஆனால் ஒரு தேர்தல் எம்முடைய தலைவிதியை முற்றுமுழுதாக மாற்றி அமைக்க கூடிய அளவிற்கு முக்கியத்துவம் பெறுவது என்பது மிகவும் குறைவு அப்படிப்பட்ட தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது என தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )