விமல் வீரவன்ச இல்லாவிட்டாலும் தோழர்கள் தேர்தல் களத்தில்!

விமல் வீரவன்ச இல்லாவிட்டாலும் தோழர்கள் தேர்தல் களத்தில்!

தேசிய சுதந்திர முன்னணியை பிரநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மொஹம்மட் முஸம்மில், நிமல் ஜயதிஸ்ஸ மற்றும் ஜகத் பிரியங்கர ஆகியோர் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியில் இம்மூவரும் போட்டியிடவுள்ளனர்.

மொஹம்மட் முஸம்மில் தேசியப் பட்டியலிலும் நிமல் பியதிஸ்ஸ நுவரெலியா மாவட்டத்திலும், ஜகத் பிரியங்கர புத்தளம் மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளனர்.

எனினும், தேசிய சுதந்திர முன்னணி இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அண்மையில் விமல் வீரவன்ச அறிவித்திருந்தார். விமல் வீரவன்ச சுயாதீனமாக போட்டியிடப் போவதில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தேசிய சுதந்திர முன்னணியில் கடந்த நாடாளுமன்றைத்தை பிரதிநிதித்துவப்படுத்திய காமினீ வலேபொட சர்வஜன பலய கட்சியின் தேசியப் பட்டியலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )