தமிழ் மக்கள் கூட்டணியில் இளையோர் அணி யாழ் மாவட்டத்தில் களமிறக்கம்;  தமிழரசு கட்சி பெண் பிரமுகர்,முன்னாள் பெண் போராளியும் போட்டி

தமிழ் மக்கள் கூட்டணியில் இளையோர் அணி யாழ் மாவட்டத்தில் களமிறக்கம்; தமிழரசு கட்சி பெண் பிரமுகர்,முன்னாள் பெண் போராளியும் போட்டி


நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியில் இம்முறை ஆளுமையும் தகுதியும் உள்ள இளையோர்களை கொண்ட அணி ஒன்று யாழ் மாவட்டத்தில் போட்டியிடவிருப்பதாக அறியவருகின்றது.

நல்லூரில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் காரியாலயத்தில் நேற்று செய்வாய்க்கிழமை இறுதிசெய்யப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியல் இன்றைய தினம் தாக்கல் செய்யப்படும் என்றும் இந்த பட்டியலில் இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த இரண்டு பிரமுகர்கள், ஒரு முன்னாள் பெண் போராளி, யாழ் மாநகரசபை முன்னாள் மேயர் மணிவண்ணன்,கட்டிடக் கலைஞர் தவச்செல்வம் சிற்பரன் உட்பட இளையோர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதேவளை, வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வேட்பாளர் பட்டியல்களை தயாரிக்கும் பணிகளிலும் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளதாக அறியவருகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )