பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது ; தமிழ் தேசிய கட்சிகள் சிவில் அமைப்புகள் யாழில் கலந்துரையாடல்!

பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது ; தமிழ் தேசிய கட்சிகள் சிவில் அமைப்புகள் யாழில் கலந்துரையாடல்!

பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பினர் கலந்துரையாடியிருந்தனர்.  

இந்த கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில்  வியாழக்கிழமை (26) மாலை   இடம்பெற்றது.  

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கட்சிகள்  கலந்துரையாடிய நிலையில்  இரண்டாவது கட்டமாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. 

குறித்த கலந்துரையாடலில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்  தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளர் வி.பி.சிவநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின், பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் க.துளசி, அரியநேத்திரன், அரசியர் ஆய்வாளர்களான ம.நிலாந்தன், யதீந்திரா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )