விடுதலை கிடைக்குமா? என்ற ஏக்கத்தோடு தமிழகம் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

விடுதலை கிடைக்குமா? என்ற ஏக்கத்தோடு தமிழகம் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

தமிழகம் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு விடுதலை கிட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகாமில் பல்வேறு காரணங்களுக்காக இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தமது விடுதலையை வலியுறுத்தி இலங்கையர்கள் பல நாட்களாக உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முகாம் பதிவில் உள்ள 16 பேரை வெளியே சென்று வழக்கை நடாத்துவதுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நாளை காலை அவர்களின் உறவுகள் முகாமிலிருந்து அவர்களை அழைத்துச் செல்லவுள்ளனர்.

மேலும் இன்னும் சில நாட்களில் ஏனையவர்களுக்கும் விடுதலை கிட்டும் என நம்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று வருடங்களாக வழக்குகள் விசாரிக்கப்படாமல் பல ஆண்டு காலமாக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். விசா காலம் முடிந்த குற்றச்சாட்டு, கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றிருந்தமை, இந்திய கடவுச்சீட்டு எடுக்க முயன்றமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள்.

விடுதலை கிடைக்குமா? என்ற ஏக்கத்தோடு கடந்த மூன்று வருடங்களாக தடுத்த வைக்கப்பட்டுள்ளனர். எனவே தங்களை விடுதலை செய்து தங்கள் குடும்பங்களுடன் வாழ வழிசெய்யுமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )