ஜனாதிபதி தேர்தலில் அநுர வெற்றி; தமிழ், சிங்கள மொழிகளில் வாழ்த்து கூறியுள்ள பிரான்ஸ் அதிபர்

ஜனாதிபதி தேர்தலில் அநுர வெற்றி; தமிழ், சிங்கள மொழிகளில் வாழ்த்து கூறியுள்ள பிரான்ஸ் அதிபர்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகநூலில் விசேட குறிப்பொன்றை பதிவிட்டுள்ள அவர் வாழ்த்துக் கூறியுள்ளார்.

இதில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் அவர் வாழ்த்து கூறியுள்ளார்.

அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அன்புள்ள இலங்கை நண்பர்களே,

உங்கள் ஜனாதிபதி தேர்தல் சிறப்பாக நடைபெற்றதற்கு வாழ்த்துக்கள். இந்த தேர்தல், இலங்கையின் ஜனநாயகத்தின் வீரியத்தை பறைசாற்றுகின்றது.

அனுரா திசாநாயக்க, உங்கள் வெற்றிக்கு எம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!

இலங்கையுடன் இணைந்து செயல்படுவதற்கு பிரான்ஸ் தயாராக உள்ளது. நம்பிக்கையும், ஒத்துழைப்பும் நம் கூட்டுமுயற்சிகளுக்கு அடிக்கல்லாக அமையட்டும்.” என்றுள்ளது.

Manoshangar Rajagobal
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )