படகு மூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற வயோதிப தம்பதியின் நிலை கவலைக்கிடம்

படகு மூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற வயோதிப தம்பதியின் நிலை கவலைக்கிடம்

இலங்கையில் இருந்து படகு மூலம் திங்கட்கிழமை அதிகாலை தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும் இந்த இருவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வருகிறது.

மன்னார் முருங்கன் பிட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி மற்றும் சிவன், ஆகிய வயோதிப தம்பதிகளான இருவருமே இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்றனர்.

இந்த நிலையில் இந்த இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில் இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இருவரின் உடல்நிலையும் மிக மோசமாக இருப்பதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )