எமது இறுதித் தீர்மானம் இதுவே: மீண்டும் அழுத்தமாகத் தெரிவித்துள்ள சுமந்திரன்

எமது இறுதித் தீர்மானம் இதுவே: மீண்டும் அழுத்தமாகத் தெரிவித்துள்ள சுமந்திரன்

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் அறிவித்துள்ளது.

சஜித் பிரேமதாசவைத் தவிர ஏனைய எந்த வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப் போவதில்லை எனவும் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அறிவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதானிகள் குழு ஒன்று அண்மையில் கூடி இந்த முடிவை உறுதி செய்ததாக அக்கட்சியின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கட்சியின் மத்திய செயற்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அமுலாக்குவது குறித்தே தற்போது ஆராயப்படுகிறது என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )