இலங்கை முஸ்லிம் நண்பியை கரம்பிடிக்க வந்த இந்தியப் பெண் விடுதலை

இலங்கை முஸ்லிம் நண்பியை கரம்பிடிக்க வந்த இந்தியப் பெண் விடுதலை

முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்ய இலங்கைக்கு வருகை தந்த தென்னிந்திய தமிழ்பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆம்திகதி வரை குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நீதிவானின் சமாதான அறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இரு பெண்களின் உளநல மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா,

முதலாவது சந்தேக நபரான 19 வயது மதிக்கத்தக்க 1 அரை வயது குழந்தையின் தாயாரை ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவித்து பெண்கள் காப்பகமொன்றில் அவரது குழந்தையின் எதிர்கால நலன் மற்றும் குறித்த பெண்ணின் நடத்தை கோலங்கள் தொடர்பில் அறிக்கை கிடைக்கும் வரை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன், எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆம்திகதி வரை குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அத்துடன், இரண்டாவது சந்தேக நபரான 24 வயது மதிக்கத்தக்க தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியான தமிழ் பெண்ணில் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படாமையினால் அவர் தொடர்பில் முன்னிலையான பெண் சட்டத்தரணி இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் ஒப்படைத்து சொந்த இடத்திற்கு மீள அனுப்புவதற்கு விடுத்த விண்ணப்பத்தை பரீசீலனை செய்த நீதிவான் இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியை விடுவித்து அனுமதி வழங்கினார்.

மேலும் எவ்வித குற்றச்சாட்டுகள் இன்றி விடுவிக்கப்பட்ட இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியை அழைத்து செல்ல மட்டக்களப்பில் இருந்து வான் ஒன்றில் பெண்கள் உரிமை தொடர்பான அமைப்பு ஒன்று பெண் சட்டத்தரணியுடன் வருகை தந்து அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )