காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி புலம்பெயர் தேசத்தில் பாரிய போராட்டம்; லண்டனில் திரண்ட தமிழர்கள்

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி புலம்பெயர் தேசத்தில் பாரிய போராட்டம்; லண்டனில் திரண்ட தமிழர்கள்

புலம்பெயர் நாட்டு உறவுகளினால் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகோரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் லண்டன் நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஓகஸ்ட் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய நேற்று லண்டன் நாட்டில் நகரில் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகோரிய பாரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் மாலை 5 மணிதொடக்கம் 8 மணிவரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த நீதிகோரிய போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான புலம்பெயர் லண்டன் வாழ் உறவுகள், இளைஞர்கள் கலந்து கொண்டதுடன் பலவந்தவமாக மறைத்து வைத்திருக்கப்படும் காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே ?, இனப்படு கொலையாளியை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்து என காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகோரிய வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.

Oruvan
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )