
பிரபாகரனின் எல்லா சொத்துக்களையும் தங்கங்களையும் கொள்ளையடித்த மகிந்த
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி பல்வேறு பகுதிகளிலும் தொடர் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மறைத்து வைத்த எல்லா சொத்துக்களையும் தங்கங்களையும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே எடுத்ததாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பரபரப்பு தகவலை
வெளியிட்டுள்ளார்.