அமெரிக்க தேர்தல் வரலாற்றில் கமலா ஹாரிஸ் சாதனை!

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் கமலா ஹாரிஸ் சாதனை!

அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுவதுடன், குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதுடன், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்காக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.4,528 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளமை அமரிக்க தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )