சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அணிதிரளுமாறு அழைப்பு

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அணிதிரளுமாறு அழைப்பு

சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளார்கள்.

இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணிதிரண்டு ஆதரவு வழங்குமாறு ம் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரால் நேற்றைய தினம் (25.08.2024) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 2024.08.30 திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. வேதனைகளுடன்,துன்பங்களுடன் பல ஆண்டுகளாக தங்களுடைய உறவுகளைத் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இலங்கையை பொறுத்தவரையில் காணாமல் ஆக்கப்பட்டோர் என்ற சொற்பதம் உருவாகக் காரணமானவர்கள் தங்களுடைய துரோகத்தின் வெளிப்பாடாக தமிழ்மக்களை வேதனைப்படுத்திக் கொண்டேயிருக்கின்றார்கள்.

சுமார் 15 ஆண்டுகாலமாக இன்னும் இதற்கு ஒரு தீர்வு இல்லை. இறுதிப்போரின் போது ஒப்படைக்கப்பட்டவர்களை காணாது படும் வேதனையில் ஏக்கத்துடன் இருக்கும் பெற்றோர்களில் சிலர் இறந்தும் விட்டார்கள் அதுகொடுமை.

இந்த நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் திருகோணமலையிலும் காலை 10 மணியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளார்கள். இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் திரண்டு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்”

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )