
குருந்தூர் மலை பௌத்தர்களுக்கே சொந்தம்; சபையில் சரத் வீரசேகர
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், தற்போதையை நாடளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர கருத்து தெரிவிக்கையில்,
பௌத்த மத்தத்தை முதன்மையாக கொண்டது எமது நாடு. அத்துடன் அனைத்து மதங்களுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுத்து நடந்துகொள்கின்றோம்.
இந்த நிலையில், முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் கடந்த வாரம் பேசுபொருளாக மாறியது. அங்கே புத்த மதம் சார்ந்த தடயங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக காணப்பட்டமை தொடர்பில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கான ஆதாரங்களும் எமக்கு கிடைத்துள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டே நாம் அங்கே பௌத்த மத சின்னங்களை நிறுவுவதற்கு தீர்மானித்து நடவடிக்கை எடுத்தோம்.
ஆனால் அதை குழப்பும் வகையில், பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உட்பட சிலர் குண்டர்களுடன் சென்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது அநீதியானது.- என்றார்.